Thalapathy vijay Mersal Tittle issue solved

'மெர்சல்' என்ற தலைப்பிலேயே படத்தை விளம்பரப்படுத்தவும், வெளியிடவும் எந்த வித தடையும் இல்லை உச்சநீதி மன்றம் மெர்சல் படம் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது.

அட்லீ இயக்கத்தில், ஆஸ்கர் நாயகன் இசையமைப்பில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரிப்பில், தளபதி விஜய் நடிக்கும் 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இந்நிலையில், ஏ.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரி ராஜேந்திரன் என்பவர் 'மெர்சல்' படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டிருந்தார். இந்த மனுவில் 'மெர்சலாயிட்டேன்' படத்தின் டைட்டிலைப் போன்றே வைக்கப்பட்டிருக்கும் 'மெர்சல்' டைட்டிலால் தங்களது படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அந்த மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 'மெர்சல்' படத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. 

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பல கோடி ரூபாய் செலவு செய்து தற்போது மெர்சல் படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது என வாதிடப்பட்டது.

இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் 'மெர்சல்' தொடர்பான எந்த விளம்பரங்களையும், வியாபார முயற்சிகளையும் அதுவரை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில் இன்று 6-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மெர்சல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 'மெர்சல்' படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், 'மெர்சல்' என்ற தலைப்பிலேயே படத்தை விளம்பரப்படுத்தவும், வெளியிடவும் எந்த வித தடையும் இல்லை என இவ்வழக்கை தள்ளுபடி செய்தது.