லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக படத்தின் முதல் லுக், இரண்டாவது லுக், மூன்றாவது லுக் என்று முன்று போஸ்டர்களை பட நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் கடந்த சில தினங்களாக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் எடுக்கப்பட்டன.

இதற்கிடையில், நெய்வேலியில் சூட்டிங்கில் இருந்த விஜயை கட்டாயமாக அழைத்துச் சென்று வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், நெய்வேலியில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று பா.ஜ.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் யிரக்கணக்கானோர் நெய்வேலியில் குவிந்தனர். அதனால், மாஸ்டர் படமும் விஜயும் பேசுபொருளாயினர். இந்தநிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சாய்பல்லவி கொடுத்த முத்தத்தால்... திக்குமுக்காடி போன சமந்தா புருஷன்... வைரலாகும் செம்ம ரொமாண்டிக் பாடல்...!

அதன்படி, ’ஒரு குட்டி கதை சொல்லட்டுமா?’ எனும் பாடல் காதலர் தினத்தன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சொன்ன டைமுக்கு சரியாக பஸ்ட் சிங்கிளை படக்குழுவினர் வெளியிட்டு அசத்தியுள்ளனர்.

நடிகர் விஜய் முதன் முறையாக ஆங்கிலத்தில் ஜாலியாக அட்வைஸ் செய்வது போன்ற எளிமையான வரிகளுடன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அசத்தலான குட்டி, குட்டி கார்டூன்களுடன் வெளியாகியுள்ள லிரிக்கல் வீடியோவை தளபதி ஃபேன்ஸ் வேற லெவலுக்கு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். யூ-டியூப்பில் பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 5 லட்சத்தை கடந்துள்ளது.