"பையனுக்கு அப்பா மாதிரி ஆகணும்னு கனவு.. தப்பேயில்லை".. பொடிவச்சு பேசினாரா தளபதி விஜய்? யார பத்தி பேசிருப்பாரு?

Thalapathy Vijay Kutty Story : தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உலக அளவில் நல்ல வசூலை கண்டு வரும் திரைப்படம் தான் லியோ. நேற்று இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவானது சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்துள்ளது.

Thalapathy vijay leo movie success meet Son and Dad Story raising many questions in TN Politics ans

லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய பலரும் தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் வருகையை குறித்து பல விஷயங்களை பேசினார். தளபதி விஜய் அவர்களும் நேரடியாக "மக்களின் ஆணைக்காக காத்திருக்கும் தளபதியாக தான் இருக்கிறேன்" என்று கூறி அவருடைய ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். 

இனி விஜய் - அஜித் போட்டியல்ல.. விஜய் - ரஜினி போட்டி தான்? - திருக்குறளில் இருந்து குட்டி ஸ்டோரி சொன்ன தளபதி!

இந்த சூழலில் தளபதி விஜய் அவர்கள் நேற்று பேசிய பல விஷயங்கள் வைரலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் சொன்ன "அப்பா மகன் கதையும்" பேசுபொருளாக மாறியுள்ளது என்றே கூறலாம். விஜய் கூறியதாவது.. "ஒரு குட்டி பையன் ஆசையா அவங்க அப்பா சட்டையை எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான்.. அப்போவோட சேர்ல ஏறி உக்காந்துக்குவான்.. ஆனா அந்த சட்டையை அவனுக்கு செட்டே ஆகாது.. தொலதொளன்னு இருக்கும்.. வாட்ச் கையிலே நிக்காது.. அந்த சேர்ல உட்காரலாமா? வேணாமா? தகுதி இருக்கா? இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை.. அப்பா மாதிரி ஆகணும்னு கனவு.. அதில் என்ன தவறு? அதனால பெருசா கனவு காணலாம்.. ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது" என்று கூறியிருந்தார்.

அதாவது யார் நினைத்தாலும், எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் வரலாம், அதில் தவறே இல்லை என்பதையே ஆணித்தரமாக கூறியுள்ளார் விஜய். தமிழக அரசியலில் வாரிசு அரசியல் என்பது இயல்பான ஒன்று தான், அது ஒன்றும் புதியதல்ல.. ஆகவே விஜய், தான் அரசியலில் நுழைவதற்கு முன்பு சொன்ன இந்த "அப்பா மகன் கதை" யாரை பற்றியது? அப்பாவை போல ஆகா ஆசைப்படும் அந்த மகன் யார்? என்ற யூகங்கள் இப்பொது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. 

அரக்கன் கெட் அப்பில் ரவுடிகளை இறக்கி சண்முகத்தை கொல்ல வந்த மனோஜ்... அண்ணா சீரியலில் செம்ம டுவிஸ்ட் வெயிட்டிங்

2026ம் ஆண்டு தேர்தலில் விஜய் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கமும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் மிகவும் வேகத்துடன் செயல்பட்டு வருவதும், அண்மையில் விஜய் மாணவர்களுக்கு நடத்திய விழாவும் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விஜய் தனித்து போட்டியிடுவாரா? அல்லது முன்னணி கட்சிகளோடு இணைந்து போட்டியிடுவாரா? என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios