Asianet News TamilAsianet News Tamil

Venkat Prabhu : யுவன் இசையில் மட்டும் இத்தனை பாடல்களா? பாடகராகவும் கலக்கும் GOAT இயக்குனர் வெங்கட் பிரபு!

Singer Venkat Prabhu : மிகப்பெரிய இசை குடும்பத்தில் இருந்து வந்த ஒரு கலைஞர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆனால் அவர் படங்களை இயக்குவதற்கு முன்னதாகவே பாடகராக திரையுலகில் அறிமுகமானார். 

Thalapathy vijay GOAT movie director Venkat prabhu songs in yuvan music ans
Author
First Published Apr 5, 2024, 6:22 PM IST

தமிழ் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசை சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும் ஒரு மாபெரும் கலைஞர் தான் இசைஞானி இளையராஜா. இவருடைய தம்பி கங்கை அமரன் அவர்களும் ஒரு மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் இசை உலகத்தில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் இயக்குனரும், நடிகரும், பாடகரும், தயாரிப்பாளருமான வெங்கட் பிரபு அவர்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான "அஞ்சலி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் பாடகராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அந்த படத்திற்கு இசையமைத்தது இளையராஜா என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல 1997 ஆம் ஆண்டு பிரபல நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான "உல்லாசம்" திரைப்படத்திலும் இவர் ஒரு பாடலை பாடியுள்ளார். 

Anna serial : பாண்டியம்மா எங்கே? வலைவீசி தேடிய செளந்தரபாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி- அண்ணா சீரியல் அப்டேட்

கடந்த2007ம் ஆண்டு முதல் அவர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். தனது முதல் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் மாநில விருதை அவர் வென்றார். தொடர்ச்சியாக இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது. 

குறிப்பாக "கோவா", "மங்காத்தா", "மாசு என்கிற மாசிலாமணி", "மாநாடு" உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல  பிரபல  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்களுடைய இசையில் ஒன்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் பாடல்களை பாடி உள்ளார். "கல்யாண கலாட்டா", "துள்ளுவதோ இளமை", "காதல் சாம்ராஜ்யம்", "தாஸ்", "சென்னை 28", "குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்", "கோவா" மற்றும் "வானவராயன் வல்லவராயன்" உள்ளிட்ட படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார். 

தளபதி விஜயின் The Greatest of All Time திரைப்படத்தை தற்பொழுது இயக்கி வரும் வெங்கட் பிரபு அவர்கள், இது யுவன் இசையில் உருவாகும் படம் என்பதால், இந்த இடத்திலும் தளபதி விஜய் அவர்களோடு இணைந்து ஒரு பாடலை பாட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

அந்த ஹீரோ தான் முக்கியம்... தனுஷை டீலில் விட்ட த்ரிஷா! 'ஆடுகளம்' படத்தில் இருந்து விலக காரணம் என்ன தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios