விஜய் மாதிரி டீசெண்டா நடந்துக்கோங்க.. லியோ பட அப்டேட் கேட்ட ரசிகர்கள் - லைட்டா கடுப்பான மிஸ்கின் - Video!
இந்த படத்திற்கான VFX அமைக்கும் பணிகளுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தளபதி விஜயின் 67வது திரைப்படத்தில் பல இயக்குனர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. இந்த படத்திற்கான தனது பணிகளை முற்றிலுமாக முடித்துக்கொடுத்துள்ளார் நடிகர் விஜய், மேலும் அடுத்த கட்டமாக இந்த படத்திற்கான VFX அமைக்கும் பணிகளுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான மிஸ்கின் தனது காரில் புறப்பட தயாரானபோது, அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டே அவரிடம் லியோ படம் குறித்து விஜயின் ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அப்பொழுது சில வினாடிகள் கடுப்பான அவர், லியோ அப்டேட் "ஒண்ணுமே இல்ல" என்று கடுப்பாக கூற அதன் பிறகு தனது காரில் இருக்கையில் அமர்ந்து கொண்டு அவர் பேசத்துவங்கினர்.
ஒருவழியாக துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்
அப்போது அவர் "கண்ணா டீசன்டாக நடந்து கொள்ளுங்கள், விஜயை போல நடந்து கொள்ளுங்கள், அவர் ஒரு ஸ்வீட் பாய், என்று கூறி கடைசியாக உங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது என்று ரசிகர்களை பார்த்து கூறினார்.
மீண்டும் ஒரு ரசிகர் லியோ படத்தில் உங்கள் கேரக்டர் என்னவென்று கேட்க, சிரித்துக் கொண்டே நான் ஒரு சிறிய வில்லன் ரோல் செய்திருக்கிறேன், விஜயுடன் நடித்தது மகிழ்ச்சி என்று கூறி அந்த இடத்திலிருந்து தனது காரில் புறப்பட்டார். தற்போது அவருடைய அந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது.
லியோ திரைப்படத்தில் இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். விஜய் உள்பட இந்த படத்தில் நடித்துள்ள பல நடிகர்கள் தங்களுடைய பகுதியை முடித்துள்ள நிலையில் விரைவில் படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.