Thalapathy Vijay Fall Down at Chennai Airport Video : ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய போது ரசிகர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு நிலை தடுமாறி கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய போது ரசிகர்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்ட விஜய் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பாதுகாவலர்கள் அவரை தாங்கிப் பிடிக்கவே காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் ரசிகர்களை மெய்சிலிரிக்க வைக்கும் அளவிற்கு பேசினார். அதில், என்னுடைய கடைசி படம் ஜன நாயகன் என்று வருத்தமாக கூறிய விஜய் இது சொல்லலாமா வேண்டாமா என்று மிகவும் வருத்தப்பட்டார் அது ரசிகர்களுக்கு இடையே பெரும் கவலையாக இருந்தது சரி அது ஒரு புறமும் இருக்கட்டும் என்று தன்னை ஆறுதல் படுத்துக் கொண்டார் விஜய் அது பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருந்தது.
சினிமாவை விட்டு ஏன் போறீங்க என்று எல்லாரும் என்னை கேக்குறாங்க சினிமா ஒரு மிகப்பெரிய கடல் அதில் நான் ஒரு சின்னதா மணல் வீடு கட்டலாம் இருந்தா எனக்கு ஆனா உங்களால எனக்கு ஒரு மாளிகை கட்ட முடிஞ்சுச்சு அதுக்கெல்லாம் காரணம் நீங்க தான் இன்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய். வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி ஜன நாயகன் படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, நரைன், மமிதா பைஜூ, மோனிஷா பிஸெஸி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு, செல்ல மகளே ஆகிய பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், செல்ல மகளே என்ற பாடலை விஜய் தனது குரலில் பாடியுள்ளார்.
குட்டி ஸ்டோரி:
விஜயின் அனைத்து படங்களிலும் ஆடுகளாகத்திற்கு விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வதை வழக்கமாக இருந்து வருகிறது ஒவ்வொரு குட்டி ஸ்டோரையும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டு இருக்கும் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வந்தது இந்த படத்தில் என்ன குட்டி ஸ்டோரி சொல்ல போகிறார் என்று மக்களுக்கு இடையே மிகுந்த வரவேற்பு பட்டிருந்த நிலையில் தற்போது ஜனநாயகன் ஆடியோ லான்ச்சிலும் விஜய் குத்து ஸ்டோரி கூறியுள்ளார்.
இந்தக் குட்டி ஸ்டோரி என்னவென்றால் ஒரு கர்ப்பிணி பெண் ஒரு ஆட்டோவில் ஏறுகிறார் மழை மிக அதிகமாக பெய்து வந்தது அப்பொழுது அந்த ஆட்டோக்கார அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு குடை ஒன்று கொடுக்கிறார். அப்பொழுது அந்த கர்ப்பிணி பெண் நான் எப்படி உங்களை தேடி வந்து இந்த குடையை மீண்டும் உங்களிடம் கொடுக்க என்று கேட்க நீ வேற யாராவது தேவைப்பட்டால் அவர்களுக்கு இந்த குடையை கொடுத்துவிடு என்று அந்த ஆட்டோக்காரர் கூறிவிட்டு செல்கிறார் அந்த கர்ப்பிணிப் பெண்ணும் மருத்துவமனை சென்று விட்டு இந்த குடையை அங்கு ஒருத்தர் மழைக்கு பயந்து ஓரமாக நிற்பதை கண்டு அந்த குடையை அந்த வயது முதியோர் இடம் கொடுத்து செல்கிறார் கர்ப்பிணிப் பெண் இதை நான் எப்படி உங்களிடம் கொடுப்பது என்று அந்த பெரியவர் கேட்க வேற யாராவது தேவைப்பட்டால் இந்த கூடையை கொடுத்து விடுங்கள் என்று அந்த கர்ப்பிணி பெண் கூறி விட்டு செல்கிறார்.
அந்தப் பெரியவர் பஸ் ஸ்டாப்புக்கு சென்ற பிறகு பஸ் வந்துவிட்டது. ஏறுவதற்கு முன் அங்கிருந்த ஒரு பூக்காரர் மழைக்கு பயந்து ஓரமாக இருப்பது பெரியவர் இந்த அம்மா இந்த குடையை வைத்துக்கொள் என்று பூக்காரரிடம் கொடுக்க இது நான் உங்களை எப்படி தேடி கொடுப்பது என்று அவர் கேட்க பெரியவர் நீ யாராவது தேவைப்பட்டால் அவர்களிடம் கொடுத்துவிட்டு என்று சொல்லி பஸ் ஏறிப் போய் விடுகிறார்.
இதற்குப் பிறகு அந்த பூக்கார அம்மா வீட்டிற்கு வரும்போது ஒரு ஸ்கூல் பெண் மழையில் நனைந்து வருவதை கண்டதும் அந்த பூக்கார அம்மா அந்த ஸ்கூல்குழந்தையிடம் கொடுத்துவிட்டு நீ வீட்டிற்கு பத்திரமாக போ என்று அனுப்பி விடுகிறார். அதற்குப் பிறகு அந்தக் அந்த ஸ்கூல் குழந்தையின் அப்பா ஐயோ மழை வேற பெய்து என் பொண்ணு எப்படி வீட்டுக்கு வரப்போகிறது வாசல்ல நின்னு வாசல்ல நின்னு பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அந்த குழந்தை குடையுடன் வீட்டுக்கு வருவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் அந்த குழந்தையின் அப்பா அது யார் என்றால் அந்த முதல் குடையை கொடுத்து அந்த ஆட்டோக்காரர் தான். அந்தக் குடை அவர் கொடுத்த குடை.
முடிஞ்ச வரைக்கும் ஒரு சின்ன சின்ன ஹெல்ப் மற்றவர்களுக்கு செய்வதன் மூலம் நம்மளுக்கு அந்த பலன் உதவும் என்று இந்த கதை மூலம் தெரிய வருகிறது என்று கூறியுள்ளார்.
