#HappyBirthdayThalapathy என்ற ஹேஷ்டேக் தென்னிந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

“பாக்ஸ் ஆபிஸ் கிங்” மட்டுமல்ல “சோசியல் மீடியாவுக்கும் கிங்” என்பதையும் அவ்வப்போது விஜய் நிரூபித்து வருகிறார். விஜய் படம் பற்றி எந்த ஒரு சின்ன தகவல் கசிந்தாலும் அதற்கென தனி ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து தளபதி ரசிகர்கள் ட்விட்டரை தாறுமாறாக தெறிக்க வைத்துவிடுகின்றனர். அப்படியிருக்க இன்று தளபதி விஜய் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சும்மா விடுவார்களா? ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாடத்தை ஆரம்பித்துவிட்டார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: தொப்புளில் தோடு மாட்டி விளையாண்டது எல்லாம் வேஸ்டா போச்சே... அதிரடி முடிவெடுத்த யாஷிகா ஆனந்த்....!

விஜய் கோலிவுட்டின் கிங்காக இருந்தாலும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா என பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதனால் ஒட்டுமொத்த தென்னிந்தியாவே தளபதி விஜய்யின் பிறந்தநாளை தாறுமாறாக கொண்டாடி வருகிறது. காமன் டிபி, மாஸ் அப் வீடியோ என அடுத்தடுத்து வெளியாக சோசியல் மீடியாவே திணறி வருகிறது. #HappyBirthdayThalapathy என்ற ஹேஷ்டேக் தென்னிந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

இந்த நல்ல நாளில் தளபதி விஜய் - லோகேஷ் கனராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் குறித்து ஏதாவது தகவல் கிடைக்குமா? என ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர். இன்று மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என ஆசையோடு காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவே படத்தின் மரண மாஸ் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இதையும் படிங்க:  பெரிய இடத்து மாப்பிள்ளையான ஐ.ஜி. மகன்... வருங்கால கணவரை இறுக்கி அணைத்த படி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை...!

“தளபதி பிறந்தநாளுக்கு போஸ்டர் இல்லைன்னா எப்படி?” என குறிப்பிட்டு அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் டாப்பில் இடம் பெற்றுள்ள “கொளுத்துங்கடா” என்ற வாசம் ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது. அதனால் அந்த போஸ்டரை ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சகட்டுமேனிக்கு ட்ரெண்டாக்கி வருகின்றனர். அந்த மாஸ் போஸ்டர் இதோ...

Scroll to load tweet…