இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதனிடையே, வாரிசு படக்குழு 2வது மற்றும் 3வது பட போஸ்டரை வெளியிடுகிறது.
நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், கோலிவுட் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
விஜய் நடிக்கும் 66வது படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து அவரது பிறந்தநாளை முன்னிட்டு 2வது மற்றும் 3வது லுக் போஸ்டர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
