Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் வெளிநாடு பறக்கப்போகும் விஜய் டீம்... ‘பீஸ்ட்’ படக்குழு இந்த முறை எங்கப் போறாங்க தெரியுமா?

இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து, அதன் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. 

Thalapathy vijay beast team may be going Russia for next schedule
Author
Chennai, First Published Jul 31, 2021, 7:01 PM IST

மாஸ்டர் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன்  திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தளபதி 65 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் பீஸ்ட் என பெயரிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. 

Thalapathy vijay beast team may be going Russia for next schedule

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்தது. தேர்தலுக்காக காத்திருந்த படக்குழு கடந்த ஏப்ரல் 6ம் தேதி, தேர்தல் முடிவடைந்தவுடன் இரவு படக்குழுவினர் அனைவருமே ஜார்ஜியா கிளம்பிச் சென்றனர். ஏப்ரல் 9-ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கியது. முதல் மூன்று நாட்கள் மழையால் கஷ்டப்பட்ட படக்குழு ஒருவழியாக வெற்றிகரமாக படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியது.  இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து, அதன் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. 

Thalapathy vijay beast team may be going Russia for next schedule

இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக பீஸ்ட் படக்குழு ரஷயா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஜார்ஜியாவில் அனல் பறக்கும் கார் பைட் சீன்கள் படப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வரும் திங்கட்கிழமை ரஷ்யா செல்ல உள்ள படக்குழு, மீதமுள்ள ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios