இந்நிலையில் படம் குறித்து கசிந்த ஸ்பெஷல் செய்தி ஒன்று தளபதி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், ஈசிஆரை தொடர்ந்து சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமீபத்தில் சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் வீரர் தோனியை விஜய் நேரில் சந்தித்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது. விரைவில் படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் எப்போது படக்குழு ரஷ்யா புறப்பட்டுச் செல்லும் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் படம் குறித்து கசிந்த ஸ்பெஷல் செய்தி ஒன்று தளபதி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 

அதாவது பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளை தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஏற்கனவே படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் அனிருத் கம்போஸ் செய்துவிட்டராம். அனைத்து பாடல்களும் பட்டையக் கிளப்பும் வகையில் தயாராகியுள்ளதாம், எனவே தீபாவளி அன்று முதல் பாடலை வெளியிட பீஸ்ட் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.