அத்துடன், முதல்முறையாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, விஜய்க்கு வில்லனாக நடிப்பதும் படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் எனலாம். 'கத்தி' படத்திற்குப் பிறகு 'தளபதி-64' படத்துக்கு 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார். இப்படி ஆரம்பமே எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்தப் படத்தின் ஷுட்டிங், தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில், விஜய்யுடன் ஹீரோயினாக நடிக்கும் மாளவிகா மோகனன் மற்றும் '96' புகழ் கவுரி கிஷான், 'பவி டீச்சர்' பிரிகிடா, வி.ஜே.ரம்யா, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனால், அதிர்ச்சியடைந்துள்ள படக்குழு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் புகைப்படங்களை யாரும் சமூகவலைதளங்களில் பகிர வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், 'தளபதி-64' படத்திற்கு 'டாக்டர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில், வரும் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 


மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள், நீட் தேர்வு பிரச்னை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருவதாகவும், அதற்கு பொருத்தமாக 'டாக்டர்' என்ற தலைப்பை படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் வேகமாக பரவிவரும் இந்த செய்தியை அறிந்து, தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.