Asianet News TamilAsianet News Tamil

தல-யை அடுத்து தளபதியோடு கூட்டணி போடும் இயக்குநர்... விஜய்யின் அடுத்த படம் இவருடனா?

வலிமை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவாக முடிவடைய உள்ள நிலையில், அதற்குள் தளபதி 65 படத்தின் வேலையும் முடித்துவிடும் எனக்கூறப்படுகிறது. 

Thalapathy 66 Movie May be directed by H Vinoth
Author
Chennai, First Published Jan 22, 2021, 3:21 PM IST

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் “வலிமை”. “நேர்கொண்ட பார்வை” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்- ஹெச்.வினோத் - போனிகபூர் கூட்டணி இரண்டாவது முறையாக ஒன்றிணைந்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது. 

Thalapathy 66 Movie May be directed by H Vinoth

‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு பல மாதங்களாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அந்த படத்தை முடித்த கையோடு ஹெச்.வினோத் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்கி, தீபாவளிக்குப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

Thalapathy 66 Movie May be directed by H Vinoth

வலிமை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவாக முடிவடைய உள்ள நிலையில், அதற்குள் தளபதி 65 படத்தின் வேலையும் முடித்துவிடும் எனக்கூறப்படுகிறது. அதன் பின்னர் இருவரும் ஒன்றிணைந்து தளபதி 66 படத்தில் பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றொருபுறம் ஹெச்.வினோத் உடன் மீண்டும் ஒன்று சேர அஜித் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios