சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, 'ராக் ஸ்டார்' அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வழக்கமான விஜய் படங்களில் இருந்து விலகி, வித்தியாசமான கதைக்களத்துடன் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வருகிறார். 

'தளபதி-64' படத்தின் முதற்கட்ட ஷுட்டிங் முடிந்த நிலையில், 2-வது கட்ட ஷுட்டிங், கடந்த நவம்பர் 1ம் தேதி டெல்லியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பிரபல கல்லூரிகள் மற்றும் நொய்டாவில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் படத்தின் ஷுட்டிங்கை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். 

40 நாட்கள் நடைபெறும் இந்த ஷெட்யூலில், விஜய் மற்றும் விஜய்சேதுபதி பங்கேற்கும் சண்டைக் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளன. தற்போது, ஒரு கல்லூரியில் விஜய்யின் ஓபனிங் பாடலை மிகபிரம்மாண்டமாக படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். 

இதில், 150 டான்சர்களுடன் இணைந்து விஜய் நடனமாடுகிறார். இந்தப் பாடலுக்கான நடன அமைப்புகளை நடன இயக்குநர் தினேஷ் வடிவமைத்துள்ளார். எப்போதுமே படத்தில் விஜய்யின் ஓபனிங் பாடல் மாஸாக இருக்கும் என்பதால், இந்தப் பாடலையும் தளபதி ரசிககர்கள் ஆட்டம் போடும் வகையில் படுமாஸாக படமாக்கி வருகிறார்களாம் படக்குழு. 'தளபதி-64' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, 2020 புத்தாண்டுக்கும், படத்தை கோடை விருந்தாக ஏப்ரல் 9-ம் தேதியும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.