"பிகில்" படத்திற்கு பிறகு "கைதி" பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவருகிறார். அந்த படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 64" என பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 64" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார்.சென்னையில் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வந்தது. 

அங்கு தினேஷ் மாஸ்டர் நடன வடிவமைப்பில் 150 கலைஞர்களுடன் விஜய் ஆடும் மாஸ் ஓப்பனிங் சாங் படமாக்கப்பட்டது. மேலும் ஹீரோயின் மாளவிகா மோகன் உடனான காட்சிகளும், விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தில் விஜய் பேராசிரியராக நடிப்பதாக கூறப்படும் நிலையில், டெல்லியில் உள்ள முக்கிய கல்லூரிகளில் ஷூட்டிங் நடைபெற்றது. தற்போது 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த டெல்லி ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனையடுத்து படக்குழுவினர் சமீபத்தில் சென்னை வந்தடைந்தனர். 

அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக "தளபதி 64" படக்குழு கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியான. இந்நிலையில் சத்தமில்லாமல் இன்று முதல் தளபதி 64 படக்குழு சென்னையில் ஷூட்டிங் நடத்தி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பின் போது விடுபட்ட காட்சிகளை படக்குழு எடுத்துவருவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் 5 நாட்கள் ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும், அதனையடுத்து 4ம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு தான் விஜய், விஜய்சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.