Thalapathi Mersal Massive New Update Part 2
தெறி படத்தின் வெற்றிக்குப்பின் தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணி மெர்சல் படத்தின்மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் வெற்றி கூட்டணி என்று தான் சொல்லணும் ஆம் இந்த கூட்டணி தொடரணும் என்று ரசிகர்கள ஆசை அதற்கு அச்சாரமும் போட்டு விட்டார்.
மெர்சலுக்குப்பின் தளபதி விஜய் 63 படத்தை இயக்க போவதும் அட்லி தானாம். அதற்கான கதையை இப்போதே தயார் செய்துவிட்டாராம்.

தளபதி விஜய் மெர்சல் ரிலிஸிற்கு பிறகு அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. மெர்சல் முடிந்து அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி கசிந்து வருகின்றது.
அதை நிரூபிக்கும் பொருட்டு அட்லீ "ஆளப்போறான் தமிழன்" டைட்டிலை பதியவுள்ளேன் என்றார். மேலும், பொண்ணியின் செல்வன் கதையை படமாக எடுக்கவும் திரைக்கதையை அமைக்கும் வேலையில் உள்ளாராம்.

அதுமட்டுமல்ல, தெறி படத்தில் இரண்டாம் பாகம் எடுப்பது போல் தான் முடித்தேன், அதேபோல் தான் மெர்சல் கிளைமேக்ஸும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தெறி, மெர்சல் என கூட்டணி நன்றாக அமைந்தால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று அட்லீ கூறியுள்ளார். இதுமட்டுமின்றி மருத்துவ உலகில் நிகழும் போலிகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மெர்சல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
