தனது எதிர்கால முதல்வர் கனவுக்கு சீவி சிங்காரித்து அலங்காரம் செய்து பார்க்க விரும்பும் நடிகர் விஜய் தனது ‘தளபதி 63’ படத்துக்கு அரசியல் வட்டாரம் அத்தனையும் அதிரும்படி ‘மைக்கேல்’த சி.எம்...என்று பெயர் வைத்துள்ளார் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

’சர்கார்’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63’ படப்பிடிப்பு  மூன்றாவது ஷெட்யூல் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களோடு கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி என்று பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகிறது. இந்தப் படத்தை 2019 தீபாவளி நாளில் திரைக்குக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். இந்த நிலையில் படத்துக்கான பெயரை படக்குழுவினர் தேர்வு செய்துவிட்டதாகவும் விஜய் பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதி மாலை படத்தின் தலைப்பையும், முதல் தோற்றத்தையும் வெளியிடவிருப்பதாகவும் சொல்கின்றனர். முந்தைய படங்களான தெறி, மெர்சல், சர்கார் தலைப்புகளும் இதே  விஜய் பிறந்தநாள் தேதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்துக்கு வெறித்தனம், மைக்கேல், மைக்கேல் த சி.எம் என்று மூன்று பெயர்களை அட்லியும் விஜயும் முடிவு செய்திருப்பதாகவும் இதில் படக்குழுவினர் அனைவரும் மூன்றாவது தலைபான ‘மைக்கேல் த சி.எம்’ என்ற டைட்டிலுக்கே டிக் அடித்திருப்பதாகவும் நம்பகமான தகவல்கள் நடமாடுகின்றன. அதென்னெ மைக்கேல் த சி.எம்? படத்தில் விஜய்யின் பெயர் கிளமெண்ட் மைக்கேல்.