இன்னும் சரியாக 6 மணி நேரத்தில், அதாவது இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63’ படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையிலும் ஆர்வக்கோளாறின் உச்சத்தில் இதுதான் படத்தின் தலைப்பு என்று சுமார் 10 டம்மி டைட்டில்கள் வரை வலைதளங்களில் நடமாடிவருகின்றன.

தளபதி 63’ படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லி இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று(ஜூன் 21) மாலை 6 மணிக்கு ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், ‘தளபதி பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு இரவு 12 மணிக்கு செகண்ட் லுக்கும் வெளியாவதாக படக்குழுவினர் கடந்த புதன் கிழமை அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பை ஒட்டி விஜய் ரசிகர்கள் பலரும் ட்விட்டர்,முகநூல் பக்கங்களில் தேவுடு காக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்னும் ஒரு சிலரோ இதுதான் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கும் தளபதி63’படத்தின் டைட்டில் என்று புரளிகளைக் கிளப்ப ஆரம்பித்துள்ளனர். அந்த லிஸ்டில் 10க்கும் மேற்பட்ட டைட்டில்கள் உள்ளன. அந்தப் பட்டியலில்,...வெறித்தனம், மைக்கல், Captain Michael, CM, அடாவடி, அதிரடி ,ஆளப்போறான் தமிழன் ,ASSAULT, என்பவை இடம்பெற்றுள்ளன. இவையெல்லாம் இல்லை. ‘நாயகன்’என்பதுதான் உண்மையில் முடிவு செய்யப்பட்டுள்ள டைட்டில். அதற்கு இயக்குநர் மணிரத்னத்திடமும் முறையாக அனுமதி வாங்கிவிட்டார்கள் என்கிறது இன்னொரு செய்தி.