மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி என்ற படத்தை, இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி என்ற படத்தை, இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் 'தலைவி' கதாபாத்திரத்தில், அதாவது ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவருடைய போஸ்டர் வெளியான போது, ஜெயலலிதா போல் துளியும் சாயல் இல்லாத பாலிவுட் நடிகையை ஏன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதை தொடர்ந்து வெளியான போஸ்டர்களில், கங்கனா ரணாவத் அச்சு அசல் ஜெயலலிதா போல் இருந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

மேலும் மற்றொரு முன்னணி கதாபாத்திரமான எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி, நடித்துள்ளார். அதே போல் பிரகாஷ் ராஜ், நடிகை பூர்ணா, மதூ, வித்யா பிரதீப், நாசர், சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே 'தலைவி' படத்திற்காக சங்கமித்து நடித்துள்ளனர்.

மிக பிரமாண்டமாக உருவாகி வரும், இந்த படத்தின்... ரிலீஸ் தேதி புதிய மோஷன் போஸ்டருடன் சமீபத்தில் வெளியானது. அதன்படி ஏப்ரல் 23 ஆம் தேதி, உலகம் முழுவதும், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு. இந்நிலையில் இன்று நடிகை கங்கானாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் சற்று முன் இந்த ட்ரைலர் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியாகியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், போராட்டங்கள், போன்ற அனைத்தையும் கண் முன்னே நிறுத்தியுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். குறிப்பாக மஹாபாரதத்தில் பாஞ்சாலிக்கு இது தான் நடந்தது, சேலையை இழிந்து அவரை அவமதித்தார்கள். மஹாபாரதத்திற்கு, இன்னொரு பெயர் உண்டு ஜெயா... என கங்கனா பேசும் வசனங்கள் வேற லெவலில் உள்ளது. 'தலைவி' படத்திற்காக கங்கனா எவ்வளவு கடினமாக உழைத்துள்ளார் என்பது இந்த ட்ரைலரில் இருந்தே தெரிகிறது.


YouTube video player