ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா  நடித்துள்ளார். "தர்பார்" படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பொங்கலுக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் "தலைவர் 168" என்ற படத்தில் நடிக்க உள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் அப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. 

டிசம்பர் 17ம் தேதி முதல் ஐதராபாத்தில் "தலைவர் 168" படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் "வலிமை" படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது. அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் போனிகபூர், இந்த படத்தையும் தயாரிக்கிறார். வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை யாமி  கவுதமும், மற்றொரு கதாநாயகியாக ஒல்லி பெல்லி அழகி இலியானாவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "வலிமை" படத்திற்காக உடல் எடையை குறைத்து, ஸ்மார்ட் லுக்கிற்கு மாறியுள்ள அஜித்தின் வித்தியாசமான கெட்டப் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

இந்த சமயத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தான் "தலைவர் 168" மற்றும் "வலிமை" படத்திற்கான ஷூட்டிங் நடக்க உள்ளது. "வலிமை" படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "தலைவர் 168" படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: மாபெரும் மாற்றத்தில் "தர்பார்" படம்... இப்படி நடக்குன்னு ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க...!

இதேபோல் கடந்த  ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த "பேட்ட" படமும், சிறுத்தை சிவா இயக்கத்தில் தல நடித்த "விஸ்வாசம்" படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. சூப்பர் ஸ்டார் படத்தால் வசூலில் எவ்வித பாதிப்பையும் சந்திக்காத விஸ்வாசம் படம் சூப்பர் ஹிட்டடித்தது. இந்நிலையில் 2020ம் ஆண்டு தீபாவளிக்கு இருவரது படமும் ஒன்றாக வெளியாகி தூள் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.