ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் "தர்பார்". "பேட்ட" படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடித்துள்ள இந்த படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ளார். பிரகாஷ் ராஜ், யோகிபாபு, மனோபாலா, ஸ்ரீமன், ஆனந்தராஜ், சுமன் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

"பேட்ட" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "தர்பார்" படத்திலும் ராக் ஸ்டார் அனிரூத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் "தர்பார்" படத்தில் இருந்து வெளியான ரஜினியின் இன்ட்ரோ சாங்கான "சும்மா கிழி" பாடல் பட்டி, தொட்டி எல்லாம் தெறிக்கவிட்டது. சோசியல் மீடியாவில் ட்ரெண்டான இப்பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டாரில் பிறந்தநாளான இன்று தர்பார் படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. 

"தர்பார்" படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அடுத்தடுத்து பல படங்கள் பொங்கலை டார்க்கெட் செய்வதால், பொங்கலுக்கு முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்தால் என்ன என படக்குழு யோசித்து வருகிறார்களாம். அத்துடன் ஜனவரி 9ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்துவிட்டால், பொங்கலோடு சேர்த்து 2 வார வசூலை பார்த்துவிடலாம் என்பதால் இந்த அதிரடி திட்டம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.