ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்து அதே வேகத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் "தலைவர் 168" படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். "தலைவர் 168" படத்தில் கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்திற்கு தங்கையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் குஷ்பூ வில்லியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது தலைவர் 168 படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இதனிடையே மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. 

நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் கையால், கீர்த்தி சுரேஷ் விருது பெற்றார். இதற்காக திரையுலகைச் சேர்ந்த பலரும் கீர்த்தி சுரேஷுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்து கூறி வருகின்றனர். 

இந்நிலையில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷை வாழ்த்தும் விதமாக தலைவர் 168 ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் கீர்த்தி சுரேஷுக்கு சூப்பர் ஸ்டார் கேக் ஊட்டுவது உள்ளிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.