இந்நிலையில், இன்று "தலைவர் 168" படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்தது சிறுத்தை சிவா இயக்கத்தில் "தலைவர் 168" படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சன்பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள அந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கான பூஜை கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலானது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், இன்று "தலைவர் 168" படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பை வெளியிட்டது, வேறு யாரும் இல்லை. "தலைவர் 168" படத்தின் இசையமைப்பாளர் டி.இமான். இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த இமான், அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…

அதில், எளிமையின் உருவமான ரஜினிகாந்தை இன்று ஷூட்டிங் தளத்தில் சந்தித்தேன். இன்று பாடலுடன் ஷூட்டிங் தொடங்கிய உள்ளது. இந்த சமயத்தில் அவர் எனது பாடலை பாராட்டி பேசியது, எனக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது. என்ன ஒரு ஒளி, அவரைச் சுற்றிலும் எனர்ஜி நிறைந்துள்ளது என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.