Thalabathi mersal will not beat Thala vivegam
தல அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான விவேகம் கலவையான வந்தாலும் வசூலிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மற்ற ரசிகர்களை திருப்தி படுத்தவில்லையென்றாலும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து சமீபத்தில் தான் 50வது நாளை கொண்டாடியது.

இந்நிலையில் இந்த தீபாவளிக்கு உலகம் முழுவது மிக பிரமாண்டமாக அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது தளபதியின் மெர்சல். இப்படம் தமிழகத்தில் விவேகத்தை விட அதிகமான திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. ஆனால், ஒரு சில மல்டிப்ளக்ஷ் திரையரங்கில் விவேகத்தை விட ஒரு சில காட்சிகள் குறைவாக தான் மெர்சல் திரையிடப்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் மெர்சல் படத்தின் நீளம் தான், விவேகம் 2 மணி நேரம் 28 நிமிடம் ஓடியது, ஆனால், மெர்சல் 2 மணி நேரம் 43 நிமிடமாம் ரன்னிங் டைம். இதனால், நேரம் காரணமாக ஒரு சில மல்டிப்ளக்ஷ் திரையரங்கில் விவேகத்தை விட சுமார் ஐந்திலிருந்து ஏழு காட்சிகள் வரை குறைவாக இருக்குமாம்.
