அல்டிமெட் ஸ்டார் அஜீத் எந்த விதமான பின்புலமும் இல்லாமல் சினிமா துறைக்கு வந்து சாதித்திருக்கும் ஒரு நட்சத்திரம். இன்று உலக தமிழர்கள் மத்தியில் உச்ச கட்ட ரசிகர்களை பெற்றிருக்கும் அஜீத் , இந்த இடத்தை அவ்வளவு சுலபமாக அடைந்துவிடவில்லை. 

பல்வேறு தோல்விகளை தாண்டி தான் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார். அவரின் கடின உழிப்பும், எளிமையான , அன்பான சுபாவமும் தான் அவரின் இந்த வெற்றிக்கு காரணம் என்றும் சொல்லலாம்.

கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு மட்டும் தான் பிறரின் மனகஷ்டத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று ஒரு கருத்து உண்டு. அதனை நிஜம் என பல தருணங்களில் உணர்த்தி இருக்கிறார் தல அஜீத். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமனும் அஜீத்தின் எளிமையை , ஆதரவை அப்படி ஒரு தருணத்தில் தான் உணர்ந்திருக்கிறார். 

திரைத்துறைக்கு கணேஷ்வெங்கட் ராமன் வந்த புதிதில் அவரை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கவில்லை. அப்படி ஒரு சமயத்தில் தான் அவர் இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவருக்கு அங்கு யாரையும் தெரியாது அதனால் தர்மசங்கடமாக உணர்ந்திருக்கிறார் கணேஷ்.

கணேஷின் தயக்கத்தை அறிந்து கொண்ட அஜீத் அவரின் அருகில் சென்று தோளில் கைபோட்டு, திரைத்துறைக்கு வந்ததற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பின்னர் தான் இந்த திரைத்துறையில் சந்தித்த வெற்றி தோல்விகளை குறித்து பேசி , கணேஷ் வெங்கட்ராமனுக்கு ஊக்கமளித்திருக்கிறார். அவரின் எளிமை, பிறரின் மனநிலை அறிந்து ஊக்கமளிக்கும் பேச்சு இவை அனைத்தும் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்திவிட்டது என்றும் கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்திருக்கிறார்.