Asianet News TamilAsianet News Tamil

அஜித்துக்கு இவ்வளவு வெறித்தனமான மாஸா...? தலயின் கெத்தை பார்த்து தலை சுற்றிய ரஜினி..!!

பி.ஜே.பி. பற்றி சமீபத்தில் ’ஒருத்தன பத்து பேர் சேர்ந்து எதிர்த்தால், யார் பலசாலி? அந்த ஒருத்தன் தானே!’ என்று முட்டுக் கொடுத்துப் பேசியிருந்தார் ரஜினி. ஆனால் இன்னைக்கு அவர் டயலாக் அவரையே பஞ்சராக்கி இருக்கிறது! என்று சிரிக்கிறார்கள் அஜித்தின் ஆதரவாளர்கள். 

thala ajith viswasam top
Author
Tamil Nadu, First Published Jan 10, 2019, 1:01 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பி.ஜே.பி. பற்றி சமீபத்தில் ’ஒருத்தன பத்து பேர் சேர்ந்து எதிர்த்தால், யார் பலசாலி? அந்த ஒருத்தன் தானே!’ என்று முட்டுக் கொடுத்துப் பேசியிருந்தார் ரஜினி. ஆனால் இன்னைக்கு அவர் டயலாக் அவரையே பஞ்சராக்கி இருக்கிறது! என்று சிரிக்கிறார்கள் அஜித்தின் ஆதரவாளர்கள். thala ajith viswasam top

என்னாச்சு?... தமிழ் திரையுலகம் பெரிதும் எதிர்பார்த்த ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ரெண்டும் இன்று செம்ம ரிலீஸ். வெல்லப்போவது தலயா? இல்லை தலைவனா? என்று பெரும் விவாதம் கடந்த இரண்டு மாதங்களாக போய்க் கொண்டிருந்தது. இன்று ரிசல்ட் வெளியாகி இருக்கும் நிலையில், முதல் கட்ட தகவல்களின் படி அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸாகி, அதிகப்படியான பார்வையாளர்களை பெற்று, அதிகப்படியான பாஸிடீவ் ரிவீயுவையும் வாங்கி விஸ்வாசமே முன்னிலையில் இருக்கிறது என்கிறார்கள். thala ajith viswasam top

பெரும்பாலான ஊர்களில் காலை 4 மணிக்கே விஸ்வாசம் மற்றும் பேட்ட ரிலீஸானது. பேட்ட படமானது மல்ட்டி ஸ்டார்ஸ் ஃபிலிம் எனும் வகையில் அந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா உள்ளிட்டவர்களும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூம் பெரும் படை பட்டாளத்துடன் மேள தாளம் முழங்க, பட்டாசு வெடித்தபடி படம் பார்க்க பெரும் பில்ட் அப்புடன் சென்றனர். அதேவேளையில் தல யின் ரசிகர் பட்டாளமோ தாறுமாறான வரவேற்புடன் விஸ்வாசம் ரிலீஸான தியேட்டருக்கு சென்றது. அதன் இயக்குநர் சிறுத்தை சிவா கூட மிக சாதாரண கலகலப்புடன் தான் தியேட்டருக்கு வந்தார் என்று தகவல். thala ajith viswasam top

முதல் ஷோவின் இண்டர்வெல் பிளாக்கிலேயே இரண்டு தரப்புகளும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் தங்கள் தரப்பு படத்தினை பற்றி பூஸ்ட் செய்தன. ஆனால் பொது ரசிகர்களின் ட்விட்டுகளை கவனித்த சினிமா விமர்சகர்கள் ‘விஸ்வாசம் ஒரு படி முன்னே நிற்கிறது’ என்றனர். ஆனால் உண்மையில் பேட்டயின் முதல் பாதி செம்ம ரகளையாகத்தான் இருந்திருக்கிறது. இண்டர்வெல் முடிந்து இரண்டாம் பாகம் ஆரம்பமாகி முடிந்ததும் முழுமையான ஃபீட்பேக் வந்தது. 

அப்போதும் இரண்டு தரப்புகளும் போட்டுத் தாக்கினர் சமூக வலைதளங்களில். ஆனால் இந்த முறை பேட்ட கை வெளிப்படையாகவே குறைந்திருப்பது புரிந்தது. அதாவது, முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் பேட்ட படத்தில் சுதி குறைவுதானாம். ஆனால் விஸ்வாசத்திலோ ரெண்டாம் பாதியிலும் சென்டிமெண்ட், ஆக்‌ஷன் என இரண்டு ஜானரிலுமே வெளு வெளுவென வெளுத்திருக்கிறார்கள். thala ajith viswasam top

பேட்ட இயக்குநர் கார்த்திக், ரஜினி ரசிகன் எனும் பார்வையில் இருந்து இந்தப் படத்தை ஸ்டைலியாக செதுக்கிவிட்டு, திரைக்கதையில் கூர்மை காட்டாமல் விட்டுவிட்டார்! என்கிறார்கள். ஆனால் அஜித்தின் ரசிகர்களாலேயே திட்டப்பட்ட சிவா, இந்தப் படத்தை தாறுமாறான வெற்றிப்படமாக கொடுத்துவிட்டு தலயை விட்டு நகர வேண்டும் எனும் எண்ணத்தில் வெறித்தனமாக உழைத்து ஒரு மெகா ஹிட்டை கொடுத்திருக்கிறார்! என்கிறார்கள்.  

பேட்ட- சொல்லும் அஸ் யூசுவல் பழிவாங்கல் கதையை விட, விஸ்வாசத்தின் அப்பா - மகள் பாசக்கதை பின்னிப் பேர்த்தெடுக்கிறதாம். ரிலீஸ் நாளான இன்றைய நிகழ்வுகள் அனைத்துமே ரஜினிக்கு உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டு வந்தன. விஸ்வாசத்துக்கான வரவேற்பை இணைய தளங்களில் பார்த்துவிட்டு அதிர்ந்துவிட்டாராம் ரஜினி.  தன் ரசிகர் மன்றத்துக்கு அரசியல் வர்ணம் தீட்டி தான் வைத்திருக்க, அஜித்தோ ரசிகர் மன்றங்களையே கலைத்துவிட்டார்.  thala ajith viswasam top

ஆனால் அப்படியிருந்தும் கூட பல லட்சக்கணக்கில் ஆண் பெண் பேதமில்லாமல் அஜித்தின் படத்துக்கு வந்து குவிந்து கொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டே விட்டாராம் சூப்பர் ஸ்டார். அதிலும்  படம் பார்த்துவிட்டு வெளியே வரும் பலர் ’நான் அஜித் சார் ஃபேன் இல்லை. ஆனா அவரை ரொம்பப் பிடிக்கும், படம் கிளாஸ்! தலன்னா மாஸ்!’ என்று ஓப்பனாய் பேட்டி தட்டுவதைப் பார்த்து அசந்துவிட்டாராம் ரஜினி. சன் பிக்சர்ஸ் எனும் பெரும் நிறுவன தயாரிப்பு, விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா எனும் பெரும் கூட்டணியுடன்  தன் தலைமையில் ‘பேட்ட’ வந்து நிற்க, வேறெந்த மேஜிக்கும் இல்லாமல் தனி ஆளாக அஜித் அடித்து துவைத்திருப்பதைப் பார்த்து தலை சுத்திவிட்டதாம் ரஜினிக்கு. சூப்பர் ஸ்டார்.... இப்ப சொல்லுங்க சார், ‘ஒருத்தன பத்து பேர் எதிர்த்து நின்னா, யாரு வல்லவன்? தல தானே!’

Follow Us:
Download App:
  • android
  • ios