திட்டமிட்டதை விட மூன்றே நாட்கள் தாமதமாக அஜீத்தின் ‘விஸ்வாஸம்’ படப்பிடிப்பு நேற்று நள்ளிரவு முடிவடைந்தது. இத்தகவலை படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றியும், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனும் சற்றுமுன்னர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அஜித், நயன்தாரா காம்பினேஷனில் கடந்த மே மாதம் ‘விஸ்வாஸம்’ படப்பிடிப்பு துவங்கியது. புனே அருகில் நடந்து வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடனக்கலைஞர் சரவணன் எதிர்பாராமல் இறந்ததைத் தொடர்ந்து படப்பிடிப்பு மூன்று நாட்கள் தடைபட்டது. பின்னர் 9ம் தேதி துவங்கிய படப்பிடிப்பு நேற்று நள்ளிரவு 3 மணிக்கு நிறைவுபெற்றதை ஒட்டி இன்று காலை அஜீத் சென்னை திரும்பினார். 

பொங்கலுக்கு ரஜினியின் ‘பேட்ட’ படம் ரிலீஸானாலும் ‘விஸ்வாஸம்’ படத்தை தள்ளிப்போடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறதாம் படக்குழு. உடன் ரஜினி படம் வருவதால் வழக்கம் போல் ஒதுங்கி நிற்காமல் இம்முறை பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று அஜீத்தைக் கெஞ்சிக்கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர்.