நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் -  போனிகபூர் - அஜித் கூட்டணி வலிமை திரைப்படம் மூலமாக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக ‘வலிமை’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். புத்தாண்டு, பொங்கல் என இந்த நல்ல நாளிலாவது ஏதாவது அப்டேட் கிடைக்காத என காத்திருத்தனர். அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக கடந்த வாரம் ஒரு செய்தி கிடைத்தது. இயக்குநர் ஹெச். வினோத் அப்பாவானார் என்பது தான் அது. தல பட இயக்குநருக்கு வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள் அத்துடன் சேர்த்து அப்டேட் கேட்கவும் மறக்கவில்லை. 

ஹெச்.வினோத் மீண்டும் 22ம் தேதி தான் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்பதால் தல அஜித் நண்பர்களுடன் பைக்கிலேயே சிக்கிம் வரை ஜாலி டிரிப் கிளம்பியுள்ளார். அப்போது சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித், அந்த கடை உரிமையாளருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனிடையே வலிமை பட டீசர் ரிலீஸ் குறித்தும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள படக்குழு ஏப்ரல் 14ம் தேதி அன்று டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. a