தல அஜித்தின் வெற்றி படங்களில் மைல் கல்லாக அமைந்தது நேர்கொண்ட பார்வை படம். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்த அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். அதே பிரம்மாண்ட கூட்டணி தற்போது வலிமை படத்தின் மூலம் ஒன்றிணைந்துள்ளது. வலிமை என்ற பெயருக்கு ஏற்றபடி பிட்டாக இருக்க விரும்பிய அஜித், தனது உடலமைப்பை பிட் செய்யும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி வந்தார். இன்னமும் அஜித்திற்கு ஜோடியாக களம் இறங்க போவது யார் எனத் தெரியாமல் ரசிகர்கள் திண்டாடிவருகின்றனர்.

படத்தின் அப்டேட்டிற்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தல அஜித்தின் மாஸ் லுக் போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலானது. வலிமை படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீசியன்கள் தேர்வு செய்யப்படாத நிலையில், டிசம்பர் மாதம் ஷூட்டிங் ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகின.

 

அதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது வெளியான தகவல் ஒன்று அஜித் ரசிகர்களை தலை கால் தெரியாமல் கொண்டாட வைத்துள்ளது. அதன்படி டிசம்பர் 13ம் தேதி வலிமை படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும், படத்தை 2020 தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர்.