நேர்கொண்ட பார்வை பட வெற்றிக்குப் பிறகு தல அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்ததோடு சரி, அதன் பின்னர் வலிமை படம் குறித்து எவ்வித அப்டேட்டையும் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடவில்லை.  ஏன்? கடந்த தீபாவளி பண்டிகையின் போது கூட மாஸ்டர் டீசர், சிவகார்த்திகேயன் பட போஸ்டர், சிம்பு பட போஸ்டர், தனுஷ் ஜகமே தந்திரம் படத்திலிருந்து பாடல் என விதவிதமாக வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு ட்ரெண்டானது. ஆனால் தல அஜித் ரசிகர்களோ வலிமை படம் குறித்து எவ்வித அப்டேட் வரவில்லையே என காண்டில் சுற்றினர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வலிமை படப்பிடிப்பு தளத்தில் தல அஜித்திற்கு மீண்டும் காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் அவர் சிறிது நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் இது உண்மையா? இல்ல வழக்கமான வதந்தியா? என தெரியாமல் குழம்பினர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு தல அஜித்தின் வலிமை படம் குறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

“வலிமை படத்தின் update கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு... படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து "வலிமை" படத்தின் update குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்” என கூறியிருந்தார். இருந்தாலும் தல அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்பதை நிறுத்துவதாக தெரியவில்லை. 

 

இதையும் படிங்க: சித்ராவின் நடத்தையில் சந்தேகம்?... ஹேம்நாத்திடம் நடந்த விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்...!

இன்னும் 20 சதவீத காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில், வலிமை படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சமீபத்தில் ஐதராபாத் ஷெட்டியூலை முடித்த படக்குழு விரைவில் அடுத்தக்கட்ட பணியை தொடங்க உள்ளதாம். அதன் பின்னர் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் எல்லாம் இருப்பதால், தல ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவருடைய பிறந்தநாளிலேயே படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக அஜித் ரசிகர்கள் #ThalaAjith என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டு செய்து வருகின்றனர்.