Asianet News TamilAsianet News Tamil

#BREAKING ‘வலிமை’ மோஷன் போஸ்டர் வெளியானது... தாறுமாறு கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்...!

தற்போது சொன்ன படியே சொன்ன நேரத்திற்கு வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வலிமை மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். 

Thala ajith valimai motion poster released
Author
Chennai, First Published Jul 11, 2021, 6:23 PM IST

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் என்ற காம்போவில் உருவாகி வருகிறது வலிமை. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றி வருகிறார். 

Thala ajith valimai motion poster released

இந்தப் படத்தின் பூஜை 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கொரோனாவின் இரண்டு அலைகளால் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது. சுமார் 2 வருடங்களாக 'வலிமை' படம் குறித்த எந்தவொரு தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, திருச்செந்தூர் முருகன், கிரிக்கெட் ஸ்டேடியம் கண்ட இடங்களிலும் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டு அட்ராசிட்டி செய்து வந்தனர். 

Thala ajith valimai motion poster released

அஜித் ரசிகர்களின் இந்த இரண்டாண்டு அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து வலிமை பட மோஷன் போஸ்டர் குறித்த தகவல்களை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர். 

Thala ajith valimai motion poster released

தற்போது சொன்ன படியே சொன்ன நேரத்திற்கு வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வலிமை மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். செம்ம மாஸான தீம் மியூசிங் உடன் Power Is State Of Mind என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரை சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios