ரஷ்யாவில் தல அஜித் போட்ட அதிரடி திட்டம்... வாய் பிளக்கும் ரசிகர்கள்..!
ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த அஜித், அந்த நாட்டில் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, 'நேர்கொண்ட பார்வை' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இந்த படத்தை தொடர்ந்து இவர் அஜித்துடன் இணைந்துள்ள இரண்டாவது படமான 'வலிமை' குறித்து, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்தவர். இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தாலும், தமிழ் மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, அதாவது கடைசியாக எடுக்க உள்ள சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, அந்த குறிப்பிட்ட சண்டை கட்சியை எடுப்பது தாமதமாகிக்கொண்டே சென்றது. இந்நிலையில் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றனர். அங்கு பிரம்மாண் டமான சேஸிங் காட்சியை 10 நாட்கள் படக்குழு படமாக்கியது. அதை முடித்துவிட்டு அனைவரும் திரும்பிய நிலையில், நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் ரஷ்யாவிலேயே தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த அஜித், அந்த நாட்டில் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே ரஷ்ய பைக் வீரர்கள் சிலரை சந்தித்து ஆலோசித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ரஷ்யாவில் உயர் ரக பைக்குடன் அஜித் நிற்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாக பகிரப்பட்டு வருகிறது.