தல அஜித்தின் Venus Motorcycle Tours.. அக்டோபர் 23ம் தேதி துவங்கும் முதல் டூர் - முழுவிவரம் வெளியிட்ட PRO!
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் தல அஜித் அவர்கள், ஒரு மிகச் சிறந்த ரேசர் என்பதையும் நாம் அறிவோம். அந்த வகையில் அண்மையில் நடிகர் அஜித் அவர்கள் சொந்தமாக ஒரு பைக் டூர் கம்பெனியை துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் "விடாமுயற்சி" திரைப்படத்திற்காக அஜர்பைஜான் நாட்டில் நடிகை திரிஷா, தல அஜித் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தல அஜித் அவர்களுடைய பைக் டூர் கம்பெனி குறித்த ஒரு முக்கியமான தகவலை அவருடைய மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ் சந்திரா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி "வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்" என்கின்ற பைக் டூர் நிறுவனத்தை தற்பொழுது அஜித் அவர்கள் அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளார் என்றும். இந்த பைக் டூர் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் மிக்கவர்களுடைய வழிகாட்டுதலின்படி டூர்கள் அமைத்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு ராஜஸ்தான், அரபு நாடுகள் (UAE), ஓமன், தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களுக்கு பைக் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும். இங்கிருந்து மேற்கூறிய நாடுகளுக்கு செல்லக்கூடிய பாதைகள் மற்றும் இடையில் தங்க கூடிய அனைத்து இடங்கள் குறித்தும் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து இந்த ரைடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி வீனஸ் நிறுவனத்தின் முதல் டூர் துவங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், முதலில் அரபு நாடுகளுக்கும் (UAE), ஓமன் நாட்டிற்கும் தங்களுடைய டூர் இயக்கப்படும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ளார். வீனஸ் நிறுவனத்திற்கு என்று தனி ட்விட்டர் பக்கமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leo Trailer: லியோ ட்ரைலர் போட்டது ஒரு குத்தமா? ரோகிணி திரையரங்கை பந்தாடிய தளபதி விஜய் ரசிகர்கள்!