Asianet News TamilAsianet News Tamil

‘வலிமை’ அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா... தல ரசிகர்களின் வெறித்தனமான போட்டோ...!

ஆனால் பல வழிகளில் அப்டேட் கேட்டு காத்திருந்த தல ரசிகர்கள் இன்று வேற லெவலுக்கு பார்த்த வேலை வைரலாகி வருகிறது. படத்தின் அப்டேட்டிற்க்காக வெறித்தனமாக வெயிட் செய்து வந்த ரசிகர்கள், வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒன்ரை தயாரித்து உள்ளார்கள். 

Thala Ajith Fans ask valimai update photo going viral
Author
Chennai, First Published Jan 21, 2021, 7:55 PM IST

​​நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் -  போனிகபூர் - அஜித் கூட்டணி வலிமை திரைப்படம் மூலமாக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Thala Ajith Fans ask valimai update photo going viral

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக ‘வலிமை’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

Thala Ajith Fans ask valimai update photo going viral
இதற்கு முன்னதாக தல அஜித்தின் வலிமை படம் குறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். “வலிமை படத்தின் update கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு... படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து "வலிமை" படத்தின் update குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்” என தெரிவித்திருந்தார். 

Thala Ajith Fans ask valimai update photo going viral

ஆனால் பல வழிகளில் அப்டேட் கேட்டு காத்திருந்த தல ரசிகர்கள் இன்று வேற லெவலுக்கு பார்த்த வேலை வைரலாகி வருகிறது. படத்தின் அப்டேட்டிற்க்காக வெறித்தனமாக வெயிட் செய்து வந்த ரசிகர்கள், வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒன்ரை தயாரித்து உள்ளார்கள். அதில், முருகனின் படமும், அஜித்தின் புகைப்படமும் இடம் பெற , " வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா" என்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த போட்டோவுடன் ரசிகர்கள் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios