தல அஜித் பற்றி எந்த தகவல் வந்தாலும் அதனை ரசிகர்கள் மிகவும் வைரலாக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது அஜித் அவருடைய மகள் மற்றும் மனையுடன் ஒரு சிலர் மத்தியில் நின்று எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தல அஜித்தை வைத்து ஹாலிவுட் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட விவேகம் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கைகோர்த்து விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் அஜித். 

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் முடிக்கப்பட்டு போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் படப்பிடிப்பிற்கு பின் கிராமிய கலைஞர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா, மனைவி ஷாலினி மற்றும் ஒரு சிலர் மத்தியில் நின்று எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது. இதில் அஜித் மிகவும் எளிமையாக, வெள்ளை தாடி மற்றும் வெள்ளை முடிகளுடன் உள்ளார். 

அவரின் மகள் அனோஷ்கா இவ்வளவு வளர்ந்து விட்டாரா என ஆச்சர்யப்படும் அளவிற்கு இந்த புகைப்படத்தில் உள்ளார். நம்ப எவர் கிரீன் நாயகி ஷாலினி எப்போதும் போல் மிகவும் சில்பிலாக உள்ளார். அந்த புகைப்படம் இதோ...