*லைக்கா தயாரிப்பில், மணிரத்னம்  இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில்  மம்முட்டிக்கு கெத்தான ஒரு  கேரக்டரை வடிவமைத்திருக்கிறார். அந்த ஃபைலை மம்மூட்டிக்கு அனுப்பிவிட்டு விளக்கவும் வைத்திருக்கிறார். கேட்பதையெல்லாம் கேட்டுவிட்டு ‘ஞான் நடிக்கல’ என்று கைவிரித்துவிட்டாராம் மம்மூக்கா. மணிக்கு செம்ம தலைவலி.

* மாஜி ஆக்‌ஷன் ஹீரோவும், மாஜி எம்.எல்.ஏ.வுமான அருண்பாண்டியன் இப்போது பிஸியான தயாரிப்பாளர். மலையாளத்தில் மரண ஹிட்டடித்த ‘கும்பாளங்கி நைட்ஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இவர் தயாரிக்கிறார். முக்கிய ரோலில் இவர் மகள் கீர்த்தி நடிக்கிறார்.

*விஸ்வாசம் படத்திற்கு தனியான கெத்தை கொடுத்த பாடல் ‘கண்ணான கண்ணே!’ டி.இமான் இசையில், தாமரை எழுதிய இந்த பாடலுக்கு சித் ஸ்ரீராம் குரல் கொடுக்க, பிய்த்துக் கொண்டது ஹிட். ஆனால் இதுவரையில் ஸ்ரீராமை அஜித் போனில் கூட அழைத்து ‘சூப்பர்’ என்று ஒரு பாராட்டு வார்த்தை கூட சொல்லவில்லையாம். ’எல்லாருக்கும் பிடிச்ச கண்ணான கண்ணே தல அஜித்துக்கு பிடிக்கலையோ?’என்று ஏங்குகிறார் சித்.

*விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது இவரா? அல்லது அவரா? எனும் கண்ணாமூச்சி ஒரு வழியாய் முடிவுக்கு வந்துவிட்டது. அவரை இயக்குவது ‘இறுதிச்சுற்று! சூரரைப் போற்று’ படங்களின் இயக்குநரான சுதா கொங்கராதான். மேடம் இப்போது  தளபதி படத்துக்கு ஸ்கெட்ச் கொடுப்பதில் செம்ம பிஸி. 

*மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் ஃபைட் படமாகி முடித்தாகிவிட்டது! என்றே தகவல். ஒரு வீடியோ ஃபுட்டேஜ் லீக்கானதையெல்லாம் லோகேஷ் கனகராஜ் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் இப்போது கமல் தயாரிப்பில், ரஜினியை வைத்து தான் இயக்கப்போகும் செம்ம ஆக்‌ஷன் படத்தின் திரைக்கதை மெருகூட்டலிலும் கவனம் செலுத்த துவங்கிட்டாராம்.