தமிழ் சினிமா உலகம் எத்தனையோ நடிகர்களுக்கு இடையிலான மோதல்களை பார்த்திருக்கிறது. சிவாஜி - எம்.ஜி.ஆர். காலத்துக்கு முன்பேயே துவங்கிய ஈகோ மற்றும் தொழில் போட்டி மோதல்கள் பல காலம் கடந்தும் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் அதிர்ச்சியே. 

அந்த வகையில் சம்பந்தமில்லாத தலைமுறைகளுக்கு இடையில் உருவாகியிருக்கும் தற்போதைய யுத்தமானது தமிழ் சினிமாவுக்கே ரொம்ப புதுசு. அதாவது சீனியர் மோஸ்ட் நடிகர் ரஜினிகாந்துக்கும், அடுத்த தலைமுறை நடிகர் அஜித்துக்கும் இடையில் உருவாகியிருக்கும் மோதலைத்தான் கோடம்பாக்கம் மட்டுமில்லை தென் இந்திய சினிமாவே மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறது. 

பேட்ட மற்றும் விஸ்வாசம் இரு படங்களுக்குள்ளும் நடந்து வரும் மோதலானது அவ்விரு மெகா ஸ்டார்களின் ரசிகர்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஷாக்காக்கி இருக்கிறது.  இந்த இரு மெகா படங்களும் பொங்கலுக்கு ரிலீஸாகியே தீருவேன் என்று ஈகோவுடன் அடம் பிடிப்பது மட்டுமில்லாமல் சிங்கிள் டிராக், செகண்ட் சிங்கிள், மியூஸிக் ஆல்பம் என ஒவ்வொன்றிலும் சொல்லி வைத்து போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

 

அதன் ஹாட் கிளைமேக்ஸாக இரு படங்களுக்கான டிரெய்லர்களும் சமீபத்தில் வெளி வந்தது. அதில் ரஜினியின் பேட்ட முதலில் வர, பல மணி நேரங்கள் கழித்து அஜித்தின் விஸ்வாசம் டிரெய்லர் ரிலீஸானது. இதிலிருக்கும் டயலாக்குகள் அனைத்துமே ரஜினி மற்றும் அஜித் இருவருக்கும் இடையில் கடும் யுத்தம் மூண்டிருப்பது போலவே பிம்பப்படுத்துகின்றன. அதிலும் ரஜினியின் மாஸுக்கு சவால் விடும் நோக்கிலேயே பார்த்துப் பார்த்து அஜித் படத்தின் காட்சிகள், டயலாக்குகள் பொறுக்கி எடுக்கப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் பெரும் கரைச்சல்...

பேட்ட பட டிரெய்லரின் ஓப்பனிங்ல, “20 பேரை அனுப்புனேன். எல்லாரையும் அடிச்சு துவைச்சுட்டான்” என்று விஜய்சேதுபதி பேசும் டயலாக் இருக்கிறது. இதற்குப் பதிலடியாக ‘அம்புட்டு பேருக்கும் வக்காலத்து வாங்கப்போயி சண்ட போட்டு ரத்தம் சிந்தியிருக்காப்ல. சிந்துன ரத்தத்துக்கு சொந்தம் வராமலா போயிடுவான்?’ அப்படின்னு ரோபோ சங்கர், அஜித்துக்கு மாஸ் கொடுக்கிறார். 

‘இந்த காளியோட ஆட்டத்த பார்க்கத்தானே போற!’ன்னு ரஜினி கேக்குறதுக்கு ‘பங்காளிகளா அடிச்சு தூக்கிடலாம்!’ன்னு அஜித் ஆப்படிக்கிறார். 
‘கொல காண்டுல இருக்கேன். மவனே கொல்லாம விடமாட்டேன்!’ அப்படின்னு ரஜினி பேச, ‘கொல கோபம் வரணும். ஆனா எனக்கு உங்களை பிடிச்சிருக்கு சார்.’ அப்படின்னு நக்கலா பஞ்சரடிக்கிறார் அஜித். கட்ட கடைசியா, ’எவனுக்காவது பொண்டாட்டி, கொழந்த குட்டின்னு செண்டிமெண்டு, கிண்டிமெண்டு இருந்தா அப்டியே ஓடிப்போயிடு.’ அப்படின்னு சொல்ல, நெத்தியடியா நேருக்கு நேரா ‘பேரு தூக்கு துர...ன்னு ஆரம்பிச்சு தன் குடும்பம் மற்றும் விலாசங்களை சொல்லி, ஒத்தைக்கு ஒத்த வாடா.’ன்னு சொல்றார். 

ஆக முழுக்க முழுக்க ரஜினியை வம்புக்கிழுத்து வெச்சு செய்யணும் அப்படிங்கிற முடிவோட அஜித் டீம் இந்த டிரெய்லரை தயாரிச்சிருக்கிறது அப்பட்டம  இருக்குது! யார் வம்பு தும்புக்கும் போகாத நல்ல மனிதர்! அப்படின்னு பேரெடுத்த அஜித்துக்கு என்னாச்சு? ஏன் இப்படி ரஜினியை தேடிப்போயி சண்டைக்கிழுக்கிறார், வெளியே தெரியாமல் ரெண்டு பேருக்குள்ளேயும் ஏதாச்சும் பஞ்சாயத்து போயிட்டிருக்குதா?...என்று கேட்கிறார்கள் கோடம்பாக்கத்து பெரும் புள்ளிகள்.  இனி அஜித் தரப்புதான் பதில் சொல்ல வேண்டும்.