சோசியல் மீடியா பக்கங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எதிலும் கணக்கு இல்லாவிட்டாலும் டாப் ட்ரெண்டிங்கில் மிரட்டுவதை தல அஜித்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார், அரசியல் விவகாரங்களுக்கு கருத்து சொல்லமாட்டார். ஆனால் அது என்ன மேஜிக்கோ தெரியவில்லை அஜித்தின் அத்தனை சங்கதிகளும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகாமல் போவது இல்லை. 

வரும் மே 1ம் தேதி தல அஜித்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக காமென் டி.பி. ஒன்றை வடிவமைத்திருந்த தல ஃபேன்ஸ், அருண் விஜய், சாந்தனு, ஆதவ் கண்ணதாசன், பிரேம்ஜி, ராகுல்தேவ், நடிகைகள் ஹன்சிகா, பிரியா ஆனந்த், ரைசா வில்சன், பார்வதி நாயர், ஆர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் மூலம் வெளியிட ஏற்பாடுகள் செய்தனர்.

இந்நிலையில் அஜித் அலுவலகத்தில் இருந்து போன் செய்து கொரோனா கோர முகத்தை காட்டி வரும் இந்த இக்கட்டான சமயத்தில் கொண்டாட்டம் எதுவும் வேண்டாமே என்று கேட்டுக்கொண்டார்களாம். இதை ஏற்றுக்கொண்ட பிரபலங்கள் மற்றும் தல ரசிகர்கள் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் காமென் டி.பி.யை ட்விட்டரில் வெளியிட்டனர். 

இதையும் படிங்க: காதல் முதல் கல்யாணம் வரை... தல அஜித் - ஷாலினியின் இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு...!

இதற்காக அஜித் ரசிகர்கள் உருவாக்கிய #ThalaAJITHBdayGalaCDP என்ற ஹேஷ்டேக் மூலம் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தூள் கிளப்பினர். சுமார் 25 மணி நேரத்தில் 5 மில்லியன் ட்விட்டுகளை கடந்து, ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியையும் சேர்ந்து தல ரசிகர்கள் அதே ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.