* செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘ராயன்’ படத்தில் செம்ம அராத்து பாத்திரத்தில் நடிக்க இயக்குநர் கம் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை கேட்டிருக்கிறார்கள். மனுஷனோ ‘நெஞ்சம் மறப்பதில்லை இன்னும் ரிலீஸாகலையே, அந்த வடுவை என் மனசு மறக்கலையே!’ என்கிறாராம். (மறப்போம், மன்னிப்போம் தலைவா)

* சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்துக்கு தமன்னாவை ஹீரோயினாக புக் பண்ணிட முயன்றாராம் இயக்குநர். ஆனால் ரஜினியோ ‘ரொம்ப சின்னப்பொண்ணா இருக்காங்களே!’ என்றாராம். அதனால் அனுஷ்கா நுழைந்தாலும் ஆச்சரியமில்லை. 
(ஏன் தல அப்ப சிவாஜி ஸ்ரேயா, காலா ராதிகா ஆப்தே, பேட்ட த்ரிஷால்லாம் ரொம்ப பெரிய பொம்பளைங்களா? பாவம் தமன்னா, ஜோடியாக்கிடுங்க)

* சூர்யா பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘காப்பான்’ படம் பரபரப்பாய் ஆல்பம் வெளியீட்டு விழாவெல்லாம் முடிந்தது. பாடல்கள் பெரிதாய் ரீச் ஆகாத நிலையில் இந்தப் படமும் ஊற்றிக் கொண்டால் தன் கேரியர் படு பாதாளம்! என்று நினைக்கிறாராம். 
(புரட்டாசி போயி ஐப்பசி வந்தா டாப்பா வருவீங்க)

* நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அத்துக்கிச்சு என்று சொல்லப்பட்ட நிலையில் நேற்று விக்கியின் பிறந்தநாளை செம்ம ஹைட்டாக கொண்டாடியிருக்கிறார் நயன். இதன் மூலம் தங்கள் லவ்வு கோயிங் கோயிங் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் நயன். அதிலும் அந்த நிகழ்வில் நயனின் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் செம்ம ஹாட்! என்று நண்பர்கள் ஒரே கிசுகிசு கிச்சுக்கிச்சு. (அப்ப இப்போதைக்கும் ஒண்ணும் பிரச்னையில்ல விக்கி)

* இதுவரையில் வெளியாகி இருக்கும் பிகில் படத்தின் பாடல்கள்  பெரிதாக ஈர்க்கவில்லை இசை பிரியர்களை. ’சிங்கப்பெண்ணே! வெறித்தனம்!’ எல்லாமே ஏற்கனவே கேட்ட ரஹ்மான் பாடல்களின் டிட்டோ சாயல்களாக உள்ளன, ஒன்றும் புதிதாக இல்லை! என்பது பொது விமர்சனமாக உள்ளது. விஜய்க்கும் இதே ஃபீலிங்காம். 

* பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கும் ‘சல்பேட்டா ஃபேமிலி’ படத்தில் பழைய மெராஸ், கபாலி கலையரசனும், தினேஷும் வழக்கம்போல் இணைந்திருக்கிறார்கள். (அப்ப  புது பாட்டில்ல பழைய சரக்குன்னு சொல்லு நைனா)

* பொன்னியின் செல்வனில் ஒரு கேமியோ ரோலில் தல அஜித்தை நடிக்க வைக்க யோசித்தாராம் மணிரத்னம். ஆனால் அவரது வி.ஐ.பி. உதவி இயக்குநர்களோ ‘வாய்ப்பே இல்லை. செய்ய மாட்டார்’ என்று சொல்லி உதட்டைப் பிதுக்கி விட்டார்களாம். (எதுனா பார்த்து செய்யு தல!)