அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது. அத்தோடு சரி அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் முட்டி மோதிய நிலையில், ஜூலை 11ம் தேதி மாலை 6 மணிக்கு விதவிதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், மிரட்டலான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டு படக்குழு தல ரசிகர்களை திக்குமுக்காட வைத்து. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதுமட்டுமின்றி வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகம் லைக் செய்யப்பட்ட இந்திய மோஷன் போஸ்டர் என்ற பெருமையையும் பெற்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்தவர். இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தாலும், தமிழ் மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் ஐதராபாத் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஜித் 61 படத்தையும் ஹெச்.வினோத் இயக்க உள்ளதாகவும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.