பிங்க் ரீமேக் படத்தில் அஜித்தின் புதிய கெட் - அப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

விஸ்வாசம் படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக்கில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜித். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தில் நடித்து வரும் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்களில் அஜித்தின் லுக் மற்றும் கெட்- அப், பிங்க் படத்தில் நடித்திருந்த அமிதாப்பச்சனின் கதாபாத்திரத்தைப் போன்றே அமைந்துள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திற்கு பத்து நாட்களோ, அல்லது பதினாலு நாட்களோ தான் நடிக்க அஜீத் கொடுத்த கால்ஷீட் கொடுத்துள்ளார். 

ஆனால், இதற்கே ஐம்பது கோடியை அள்ளிக் கொடுக்க தயாராகிவிட்டார்கள். ஏனெனில் மொத்தம் அவரை வைத்து மூன்று படங்களை திட்டமிட்ட போனிக்கபூர், இப்போது நான்காவது முறையாகவும் அஜித்தை வளைத்துப் போட முயற்சி எடுக்கிறாராம். அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைக்கு வந்த நான்கே மாதங்களில் மீண்டும் ஒரு அஜித் படம் ரிலீஸாக இருக்கிறது.  பிங்க் ரீமேக் மே 1 ந் தேதிக்கு திட்டமிடப்பட்டிருப்பதால், அஜித் ரசிகர்கள் குஷியாவார்கள். அதே நேரத்தில் அடிக்கடி வந்தால் ஒரு அலுப்பு வருமே, அதை யார் கவனிப்பது?