காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்தியா இருவரும் கடந்த ஆண்டு ஏற்றப்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். மேலும் நித்தியா இனி கணவருடன் வாழ போவதில்லை என முடிவு செய்து விவாகரத்து பெற நீதி மன்றத்தை நாடினார். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நித்தியா பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் இருந்து வந்த அழைப்பை ஏற்று கொண்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் செல்வதை அறிந்து, தாடி பாலாஜியும் மனைவியை சாமான படுத்துவதற்காக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

தாடி பாலாஜியை மன்னிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்த இவருக்கு,  கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்கள் அறிவுரை கூறியதால் மீண்டும் பாலாஜியுடன் வாழ சம்மதித்தார். 

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில்... தாடி பாலாஜி தன்னையும் தனது மகளையும் மிரட்டுவதாகவும், குடித்துவிட்டு நண்பர்களுடன் வந்து கதவு, ஜன்னல்களை உடைத்து தொல்லை கொடுப்பதாகவும் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் போலீசார் முன் ஆஜரான தாடி பாலாஜி இந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில் தனது மனைவி நித்யாவை மிரட்டவில்லை என்றும் வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டதாக கூறப்படும், அன்று தான் சென்னையிலேயே இல்லை என்றும் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தாகவும் தன் மீது நித்யா பொய் புகார் தெரிவித்து உள்ளதாகவும் கூறியுள்ளார். 

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் போலீஸ் நிலையம் வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு தர தயார் என்று எழுத்துப்பூர்வமாக தாடி பாலாஜி போலீசாரிடம் எழுதி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் இருந்து இவர்கள் இருவரின் தற்போது யார் பொய் சொல்கிறார்கள் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.