அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘குற்றம் 23.’

இத்திரைப்படத்தை தனது ‘ரெதான் – தி சினிமா பீப்பள்’ நிறுவனம் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார், தற்போது ‘தடம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்திலும், நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். கிட்ட தட்ட இந்த திரைப்படமும் 'குற்றம் 23' பட பாணியில் தான் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  ‘தடம்’ படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் மகிழ் திருமேனி, தயாரிப்பு இந்தெர்குமார், ஒளிப்பதிவு கோபிநாத், படத் தொகுப்பு ஷ்ரிகாந்த், கலை இயக்கம் அமரன், இசை அருண்ராஜ், பாடல்கள் மதன் கார்க்கி, சண்டை இயக்கம் அன்பு, அறிவு, நடனம் தினேஷ் மாஸ்டர் அமைத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் மகிழ் திருமேனி-அருண் விஜய் கூட்டணியில் உருவான ‘தடையறத் தாக்க’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் ‘தடம்’ படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. 

படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது ‘தடம்’ படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கியது. படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘தடம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 
மேலும் திரைப்படம் புத்தாண்டிற்கு வெளியாகும் என கூறப்படுகிறது. 

இந்த டிரைலர் ஆரம்பத்திலேயே செம ஹாட் லிப் கிஸ்சில் இன்ட்ரோ கொடுக்கும் அருண் விஜய் ரொமாண்டிக் ஹீரோவாக தெரிந்தாலும், பின் இந்த கதை மிகவும் திரில்லர் பாணியின் போகும் என இந்த டிரைலர் பார்த்தாலே தெரிகிறது.

படத்தின் டிரைலர் இதோ: