ten page dialogue will give you he will take ten-minute and give memorable performance - Nayantara

பத்து பக்க வசனம் கொடுத்தாலும் பத்து நிமிடத்தில் மனப்பாடம் செய்து சிறப்பாக நடித்து விடுவார் “சிவகார்த்திகேயன்” என்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா புகழ்ந்தார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேலைக்காரன்’.

இதில் பிரகாஷ் ராஜ், பகத் பாஷில், சினேகா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்பட அனுபவம் குறித்து நயன்தாரா ஒரு பேட்டி அளித்தார்:

அதில், “வேலைக்காரன் படத்தில் நடிப்பது மிகவும் சுவாரஸ்யமானது. சிவகார்த்திகேயன் மிகவும் கலகலப்பாக பேசுவார். அவர் இருந்தால் படப்பிடிப்பு தளமே கலகலப்பாக இருக்கும்.

அவர் எப்போது ஏதாவது காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பதால், வேலை பளுவே எனக்கு தெரியவில்லை.

அதே சமயம் பத்து பக்க வசனம் கொடுத்தாலும் 10 நிமிடத்தில் மனப்பாடம் செய்து சிறப்பாக நடித்துவிடுவார் சிவா” என பெருமையாக தெரிவித்துள்ளார்.