இந்த சூப்பர் ஸ்டார் தான் இன்னைக்கு "தர்பார்" மோஷன் போஸ்டர வெளியிட போறாரு... தெலுங்கு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்பிரைஸ்...!

'பேட்ட' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு போலீஸ் கேரக்டரில் ரஜினி எண்ட்ரி கொடுக்க உள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, நிவேதா தாமஸ், ஜட்டின் சர்னா, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மும்பையில் தீவிரமாக ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், தற்போது பரபரபாக போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சிறப்பான வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

இதனிடையே 'தர்பார்' படத்தின் இசையமைப்பாளரான அனிரூத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில், அந்தந்த மொழிகளின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் போஸ்டரை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது யாரெல்லாம் மோஷன் போஸ்டரை வெளியிடப்போவது என்ற அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ரஜினியின் ஆருயிர் நண்பரான கமல் ஹாசன் தான் 'தர்பார்' படத்திற்கான தமிழ் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார். நாளை உலக நாயகனுக்கு பிறந்த நாள் என்பதால் ரஜினி, கமல் ரசிகர்கள் இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர்.

மலையாள போஸ்டரை சூப்பர் ஸ்டார் மோகன் லாலும், இந்தி போஸ்டரை சல்மான் கானும் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஆனால் தெலுங்கு போஸ்டரை ரிலீஸ் செய்யப் போவது யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. முதலில் ரஜினியின் ஆத்ம நண்பரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் தெலுங்கு வெர்ஷனை வெளியிடுவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தெலுங்கு மோஷன் போஸ்டரை வெளியிடுவார் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு தெலுங்கு ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.