சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கிய 'அடல்ட் - காமெடி' படமான ஹரஹர மகாதேவகிக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, அதே பாணியில் அடுத்த படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தவர், இந்த ட்ரெய்லர் கண்ணில்படவும் அதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.  இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட படம்  இதில் கௌதம் கார்த்திக், யாஷிகா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்திருந்தனர்.

வயதுவந்தோருக்கான செக்ஸ் காமெடி படம் என்று முடிவுசெய்துவிட்டதால் வசனங்களில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். இரட்டை அர்த்த வசனங்கள் ஏதும் படத்தில் கிடையாது. பாலியல்ரீதியான வசனங்கள் எல்லாமே நேரடியானவைதான். 2 நாயகிகள், தனி வீடு, செக்ஸிற்கு ஏங்கும் பேய் என  கவர்ச்சி, பாலியல் வசனங்கள் என கலகலப்பாக படத்தை நகர்த்த முயன்றிருக்கிறார், சுயஇன்பம், ஓரினச்சேர்க்கை, BDSM என பாலியலில் பல்வேறு வண்ணங்களையும் மிக்ஸ் பண்ணி ரணகளப்படுத்தியிருந்தனர்.

முழுக்க முழுக்கு அடல்ட் காமெடிகளும், வசனங்களும் கொண்ட இப்படம் சில சர்சைகளை சந்தித்தாலும் திரைத்துறை பிரபலங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும்  நல்ல வசூல் வேட்டையாடியது.  செய்தது. இது போல கதையம்சம் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வந்தன.

இந்நிலையில் இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் கடி கடிலோ சித்தா கொட்டுடு என பெயரிட்டுள்ள இப்படத்தை சந்தோஷ் இயக்கியுள்ளார். இதில் நிக்கி தம்போலி, பொசானி முரளி கிருஷ்ணா, ரகுபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் எல்லை மீறிய கவர்ச்சி, இரட்டை அர்த்தங்கள், காட்சிகள் என தமிழ் வெர்சனை முந்தியுள்ளது. 5 மணிநேரத்தில் 1 மில்லியன் லைக்குகளை அள்ளிய இந்த டிரைலர் தற்போது 2.8 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.