தெலுங்கு சூப்பர்ஸ்டர் மகேஷ் பாபு நடித்த பிசினஸ் மேன், டான் சீனு, ரவி தேஜான் நடிப்பில் கிக், பைசா உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.வெங்கட்.

தெலுங்கு சூப்பர்ஸ்டர் மகேஷ் பாபு நடித்த பிசினஸ் மேன், டான் சீனு, ரவி தேஜான் நடிப்பில் கிக், பைசா உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.வெங்கட்.

தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமானவரும், பல வெற்றிப்படங்களை தாயரித்தவருமான தயாரிப்பாளர் ஆர்.ஆர்.வெங்கட் காலமானார். அவருக்கு வயது 54. தெலுங்கில் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடித்த பிஸினஸ் மேன், ரவி தேஜா நடித்த கிக் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர். வெங்கட். சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் ஆர்.ஆர்.வெங்கட் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் ஏக் ஹசினா தி, ஜேம்ஸ் ஆகிய இந்திப் படங்களையும் ஆர்.ஆர்.வெங்கட் தயாரித்துள்ளார். இவரது நிறுவனம் ஒட்டுமொத்தாமாக 14 படங்களை தயாரித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த ஆர்.ஆர்.வெங்கட் மறைவிற்கு நடிகர், நடிகையர், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.