நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ப்ரேமம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வெற்றியை கருத்தில் கொண்டு தெலுங்கில் பிரேமம் படம் ரீமேக் செய்ய பட்டது இதில் நாயகனாக நாகசைதன்ய நடித்தார், மலர் டீச்சர்ராக ஸ்ருதி ஹாசன் நடித்தார். இப்படத்தின் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது .

ஏற்கனவே இப்படத்தில் டீசர் வெளிவந்து தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் கிண்டல் செய்யப்பட்டது.

அதிலும் ஸ்ருதிஹாசனை எல்லாம் எல்லை மீறி கிண்டல் செய்தார்கள், இதனால் கமெண்ட் பேஜ் ஆப் செய்ய பட்டது.

இந்நிலையில் இப்படம் இன்று வெளிவருகிறது என்று அறிந்ததும் இதனை கிண்டல் செய்வதற்காக மிமி கிரியேட்டர்கள் ரெடியாக இருந்தனர்.

ஆனால், படம் உண்மையாகவே நன்றாக இருக்கின்றதாம், தெலுங்கு ரசிகர்கள் பிரேமதை கொண்டாடி வருகின்றனர்.

மலையாள பாதிப்பிற்கு எந்த ஒரு இடத்திலும் பாதிப்பு வராதப்படி எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.