Telugu Actors : வடகிழக்கு பருவமழையால் ஆந்திர பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்காக தெலுங்கு நடிகர்கள் உதவி கரம் நீட்டியுள்ளனர்.

இந்த வருட வடகிழக்கு பருவமழை சற்று அதிகமாகவே பொலிந்து விட்டதை. இதனால் தமிழகம், ஆந்திர என பல மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில் ஆந்திராவின் முக்கிய மாவட்டங்களான நெல்லூர், சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட சற்று அதிகமான மழைப் பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்கு உள்ள மக்கள் பெருத்த சேதம் ஏற்ப்பட்டுள்ளதுத்தை சந்தித்தனர்.

.இந்த வெள்ளத்தில் சிக்கி 40க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். 

இந்நிலையில் வெள்ள பாதிப்பால் உருக்குலைந்துள்ள ஆந்திர மக்களுக்கு உதவும் வகையில் தெலுங்கு நடிகர்களான மகேஷ்பாபு, சிரஞ்சீவி, ஜூனியர் NTR தலா 25 லடம் ரூபாய் நிவாரண நிதி அளிப்பதாகஆந்திர முதல்வருக்கு டிவிட்டர் வழியாக தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜூனியர் NTR: ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை கண்டு நெகிழ்ந்து, அவர்கள் மீண்டு வருவதற்கான சிறு நடவடிக்கையாக 25 லட்சத்தை வழங்குகிறேன்.

Scroll to load tweet…

இதுகுறித்து பதிவிட்டுள்ள மகேஷ்பாபு : ஆந்திராவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தின் வெளிச்சத்தில், CMRF க்கு 25 லட்சத்தை வழங்க விரும்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் AP க்கு உதவ அனைவரும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்

Scroll to load tweet…
Scroll to load tweet…

இதுகுறித்து பதிவிட்டுள்ள சிரஞ்சீவி: ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் அடைமழையால் ஏற்பட்ட பரவலான பேரழிவு மற்றும் அழிவுகளால் வேதனையடைந்தேன். நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சங்களை தாழ்மையான பங்களிப்பாக வழங்குதல்.

Scroll to load tweet…
Scroll to load tweet…