தெலுங்கு திரையுலகில், மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தமிழிலும், ஒரு சில படங்களில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் என்பதை தாண்டி, அரசியல்வாதியாகவும் மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில் இவர் தொழில்முறை காரணமாக, மும்பை சென்றுள்ளார். சென்ற வேலையை முடித்து கொண்டு, தனியார் விமானத்தின் மூலம், ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார். இவர், வந்த விமானத்தில் திடீரென ஏதோ கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியானதால் மிகப்பெரிய,  பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் சிரஞ்சீவி உள்பட, 120 பயணிகள் இந்த விமானத்தில் பயணித்தனர். விமானத்தில், ஏற்பட்ட  கோளாறு உடனடியாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, விமானம் மீண்டும் மும்பைக்கே திருப்பி விடப்பட்டது. இதைதொடர்ந்து, சிரஞ்சீவி உட்பட 120 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.  

பின் அனைவரும் மாற்று விமானம் மூலம் ஐதராபாத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலால் சிரஞ்சீவி ரசிகர்கள் பதற்றத்தை உச்சிக்கே சென்றனர். தற்போது இவர் நலமாக உள்ளார், என தகவல் வெளியானதை தொடர்ந்தே அனைவரும் நிம்மதி அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.