Telugu cinema scolding Regina
சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்துக்குப் பிறகு இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் வராததால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி தெலுங்கு சினிமாக்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வரும் இவர், தமிழில் மாநகரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘ஜெமினி கணேஷனும் சுருளி ராஜனும்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’ என தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
இதனாலேயே தெலுங்கு சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம். மேலும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என யார் வந்தாலும் அவர்களை அவர் சந்திக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ரெஜினா மீது கடும் கோபத்தில் இருக்கும் தெலுங்கு சினிமா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவரை திட்டி விமர்சித்து வருகின்றனராம்.
